தொழிலாளர்களின் பிறந்த நாளான மே 1ல் பிறந்த சினிமா தொழிலாளி அஜீத் , தனது பிறந்த நாள் ஒரு ராசியில்லாத நாள் என்று நம்ப ஆரம்பித்து இத்தோடு 14 ஆண்டுகள் ஆகின்றன என்று சொன்னால் நம்ப கஷ்டமாக இருக்கும்.

2004 மே 1 அன்று ரிலீஸாகி படுதோல்வி அடைந்த ‘ஜனா’வுக்கு முன், வருடா வருடம் எப்படியாவது தனது பிறந்த நாளன்று படங்கள் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அஜீத், அத்தோடு மே 1 ஐ கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் தனது பிறந்தநாள் பார்ட்டிகளையும் முற்றிலும் தவிர்த்தார்.

இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப்பின், விநோத் இயக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்காக நடித்துக்கொடுக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கை 2019 மே 1 அன்று ரிலீஸ் செய்ய சம்மதித்திருக்கிறார் அஜீத். நேற்று பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி நான்ஸ்டாப்பாக நடைபெற உள்ளது.

பிங்க்’ படமாவது அஜீத்தின் மூட நம்பிக்கையைத் தகர்க்குமா என்று தெரிந்துகொள்ள 5 மாதங்கள் காத்திருக்கவேண்டும்.