பொங்கலை முன்னிட்டு ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் 10ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு முதல் நாளன்று நள்ளிரவு ஒரு மணிக்கு காட்சிக்கே அனுமதி பெற்றிருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி செய்திகள் உலா வருகின்றன.

நள்ளிரவு ஒரு மணியில் துவங்கி சுமார் எட்டு காட்சிகள் வரை ‘விஸ்வாசம்’ திரையிட இருப்பதை ஒட்டி உற்சாகத்திலிருக்கும் அஜீத் ரசிகர்களுக்கு அதையும் விட உற்சாகமான செய்தி ஒன்றும் கிசுகிசுக்க்கப்படுகிறது.

அது இதுதான். நேற்று முன் தினம் பின்னிரவில் தனது மனைவி மற்றும் ‘விஸ்வாசம்’ யூனிட்டின் தலைமை டெக்னீஷியன்களுடன் படம் பார்த்திருக்கிறார் தல. ஆனால் அவர் இடைவேளையின்போது இயக்குநர் சிவா இருக்கும் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சிவாவுக்கு பி.பி. உச்சத்துக்கு எகிறியிருக்கிறது.

படம் இடைவேளைக்குப் பின் துவங்கி க்ளமேக்ஸ் முடிந்தவுடன் நேரே சிவாவின் இருக்கையை நோக்கி எழுந்து வந்த அஜீத், அவரது கனத்த உடலைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘ஹேய் மேன் தெலுங்குப்படத்தை முடிச்சிட்டு மறுபடியும் ஒழுங்கா என்கிட்ட வந்து சேரு’என்று உத்தரவே போட்டாராம். அதற்கு அப்புறம்தான் ஆசுவாசமானாராம் சிவா.