ajith request for puplic
தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சென்னை பகுதிகளில் சைதை, கொரட்டூர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் பாதிக்கப்பட்டு தங்கும் இடம் மற்றும் உணவிற்கு கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம்,தொண்டு நிறுவனம், திருமண மண்டபம், அவரது இல்லம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் உபயோகித்துக்கொள்ளலாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர்களுக்கான உணவு, உடை, பராமரிப்பு போன்றவற்றையும் தானே செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.
