Ajith pride song from vivegam is on the way

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பெரும் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'விவேகம்'படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

140 நிமிடங்கள் அதாவது 2 மணி 20 நிமிடங்கள்ஒடக் கூடிய இப்படத்தின் போஸ்ட்புரடொக்ஷன்ஸ் பணிகள் விறு விறுப்பக நடைபெற்று வருகிறது. அஜித் இந்த படத்தில்சர்வதேச இண்டலிஜெண்ட் ஏஜண்ட்டாகநடித்து வருகிறார்.

ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒப்புக்கொண்ட கேரக்டரைதிரையில் உண்மையாக கொண்டு வர வேண்டும் என தனது கடுமயான உழைப்பை கொட்டியுள்ளர். அவருடைய அர்ப்பணிப்பு,உழைப்பு ஆகியவற்றை பறை சாற்றும் விதமாக சர்வைவா உருவாக்கப்பட்டது.

இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இன்னொரு பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தலை விடுதலை என்று தொடங்கும் அந்த பாடலை வரும் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின்தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும்ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.