ajith next movie title announced

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணி, நான்காவது முறையாக இணைய உள்ளது, ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாகவும் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்த படத்தை 'விவேகம்' படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சத்யஜோதி பட நிறுவனம் தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பாரம்பரிய பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள, தங்கள் நிறுவன அடுத்த தயாரிப்பான படத் தலைப்பை அறிவித்தார்.

இந்தப் படத்தின் தலைப்பும் அஜித்தின் வி செண்டிமெண்ட் படி "விசுவாசம்" என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஜனவரி மாதம் "விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றும் 2018 தீபாவளி அன்று "விசுவாசம்" வெளி வரும் என தயாரிப்பாளர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.