ajith new house

நடிகர் அஜித் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தற்போது விவேகம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறார் அஜித்.

திருவான்மியூர் பகுதியில் மிகவும் பிரமாண்டமான பங்களாவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு வெள்ளம் வந்த போது பொது மக்கள் பலருக்கு இந்த வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொண்டார் அஜித்.

தற்போது இந்த வீட்டில் ஒரு சில நவீன மாற்றங்களை கொண்டு வர, அந்த வீட்டில் இருந்து வேறு வாடகை வீட்டுக்குச் சென்று வசித்து வந்தார் அஜித் என கூறப்படுகிறது.

தற்போது அஜித்தின் திருவான்மியூர் வீட்டில் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம். இந்த வீட்டில் அனைத்தையும் வெளிநாட்டு தரத்தில் ரிமோர்ட் மூலம் இயக்குவது போல் பிரதியேக ஹோம் டிசைனர் வைத்து வடிவமைத்துள்ளாராம் அஜித்.

மேலும் தன்னுடைய மகள் மற்றும் மகன் விளையாட தனி இடம், மகள் பாரதம் கற்க தனி இடம், காதல் மனைவி ஷாலினி ஷட்டில் விளையாட என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளாராம் அஜித்.