லண்டனில் தொடங்கப்பட்ட துணிவு புரோமோஷன்: வைரலாகும் வீடியோ!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் புரோமோஷன் தற்போது லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.

Ajith Kumar and Manju Warrier Starrer Thunivu Movie Promotions Started in London

அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் காம்பினேஷனில் 3ஆவதாக உருவாக்கப்பட்டுள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேன் கடவுளடா, கேங்க்ஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

விபத்துக்கு பின்... மீண்டும் புது கார் வாங்கிய யாஷிகா ஆனந்த் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்த டிரைலரை வைத்து பார்க்கும் போது படம் வங்கி கொள்ளையை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால், படம் முழுவதும் வங்கி கொள்ளையை மையப்படுத்தி இருக்காது. வங்கி கொள்ளை என்பது படத்தின் ஒரு பகுதி தான். துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. 2ஆம் பகுதி அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான பொழுதுபோக்கு படம். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் துணிவு படம் இருக்கும் என்று இயக்குநர் ஹெச் வினோத் கூறியிருந்தார். இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 26 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read This: துணிவு படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய தடை விதிப்பு... அந்த ஒரு காட்சியால் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்

உலகம் முழுவதும் வெளியாகும் துணிவு படம் தமிழகத்தில் மட்டும் 480 திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்வளவு ஏன் உலகத்தின் மிகப்பெரிய திரையரங்கான பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் இரவு 12 மணிக்கு துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்த நிலையில், துணிவு படத்தின் புரோமோஷன் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளானை மாற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்: துணிவு, வாரிசு 480 திரையரங்குகளில் ரிலீஸ்!

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios