Ajith is the only superstar... Vivek Operai speech
தென்னிந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் மட்டுமே என்று, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பாராட்டியுள்ளார்.
நடிகர் அஜித்குமாருடன் உடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க, சிவா இயக்கியுள்ள படம், விவேகம். இந்த படம், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், விவேகம் படத்தில் நடித்தது பற்றிய அனுபவம் குறித்து ஐஏஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு விவேக் ஓபராய் பேட்டி அளித்துள்ளார்.
அதில் முதல்முறையாக, நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளேன். படத்தின் பெயர் விவேகம். இதில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித் உடன் இணைந்து நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
விவேகம் படத்தின் டீசர் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்தை விவேக் ஓபராய், சூப்பர் ஸ்டார் என வர்ணித்திருப்பது அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
