’எங்க ஹீரோ படம் வேணும்னா அந்த ஹீரோ படத்துக்கு ஒரு சிங்கிள் ஸ்கிரின் கூட கொடுக்கக் கூடாது’என்று பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் ரிலீஸ் நேரத்தில்  கெடுபிடி காட்டுவார்கள்.

 

தியேட்டர்காரர்களும் வேறு வழியில்லாமல் ஒரு ஹீரோவை வாழ வைத்து இன்னொரு ஹீரோவை நசுக்குவார்கள். ஆனால் கைதி, பிகில் விஷயத்தில் நடந்ததே வேறு. பிகில் தரப்பு அப்படியெல்லாம் மிரட்டவில்லை. ஆனால் ‘பெரிய தியேட்டரையெல்லாம் எங்களுக்கு கொடுத்துவிடுங்கள். சின்ன தியேட்டரில் வேண்டுமானால் கைதிய போட்டுக்கலாம்’எனக் கூறி இருக்கிறார்கள்.

 

ரிலீசுக்குப் பிறகு நடந்து கொண்டிருப்பதோ வேறு.  பிகிலை பின்னுக்கு தள்ளியது கைதி. விமர்சகர்களும் பொதுமக்களும் கைதியை தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பிகில்? சுமார் பத்து சதவீதம் நஷ்டம் வருமாம் தயாரிப்பாளர்களுக்கு. இப்படியொரு தகவல் வெளி வந்து கொண்டிருக்கும் வேளையில்,  பிகில் திரைப்படம் இதுவரை சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் ஓடி உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதன் மூலம் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் மொத்த வசூலையும் 5 நாட்களில் கடந்துள்ளளதாகவும், விஸ்வாசம் திரைப்படம் ரூ 183 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறுகிறார்கள். முன்னர் மெர்சல், சர்கார் போன்ற  விஜய் நடித்த படங்களும் ரூ.200 கோடி வசூலை ஈட்டியதாக கூறுகிறார்கள். ஆனாலும் கைதி படத்திற்கு ஷோக்களும், தியேட்டர்களும்  அதிகரிக்கப்பட்டு வருவகிறது.