அஜித் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் விஸ்வாசம். இந்த படம் வரும் பொங்கலன்று திரைக்கு வர  உள்ளது. இதற்கு முன்னதாக சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தின் 
பாடல் காட்சிகள் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு  நடனம் ஆடும் டீமில் உள்ள  சரவணன் என்பவர், திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

இந்த சம்பவத்தால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சரவணனின் உடலை மும்பையில்  இருந்து சென்னை  கொண்டு வர அதற்கான செலவை அஜித்தே ஏற்றுக் கொண்டு உள்ளார்.

மேலும், சரவணனின் வீடான சைதாப்பேட்டைக்கு சென்று, அவரது இறுதி சடங்கில் பங்கேற்றார் அஜித்.