நடிகர் அஜித் எப்போதும் தன்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் நினைவில் வைத்துக்கொள்பவர். மேலும் தன்னுடன் பணியாற்றிய நடிகர்களுக்கு ஏதேனும் உதவி என்றால் ஓடிப்போய் உதவும் மனம் கொண்டவர்.

இவரின் குணத்திற்கே பல ரசிகர்கள் உள்ளனர். செய்த உதவிகளை போஸ்டர் அடித்து ஒட்டி பிரபலப்படுத்திக் கொள்ளும் இந்த காலத்தில், செய்த உதவியை வெளியில் கூட வெளிப்படுத்திக்கொள்ளலாமல் இருக்கும் மனிதர் அஜித்.

பலருக்கும் இவர், உதவி செய்தார் என்று கேள்வி பட்டிருக்க முடியுமே தவிர, நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அஜித், பிரபல புகைப்பட கலைஞர் சித்ரா சாமிநாதனுக்கு உதவி செய்துள்ளதாக அவருடைய மகள் கூறியுள்ளார்.

நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலங்களில் மொத்த நடிகர்களின் புகைப்படங்களும் இவரின் கைவசம் தான் இருக்கும். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிக்கும் இவர் தான் போட்டோ கிராபர். இப்படி பல பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர்தொடந்து புகைப்பிடித்ததால் மாரடைப்பு வந்து நிறைய செலவு செய்த பிறகும் மரணப்படுக்கையில் இருந்துள்ளார். 

இவர் நன்றாக இருந்த போது நட்பு பாராட்டிய பலர் இவர் நொடிந்ததும் இவரை விட்டு விலக ஆரம்பித்தனர். இவருடைய நிலையை பற்றி அறிந்த அஜித் உடனடியாக இவருக்கு உதவிகள் செய்துள்ளார்.  இந்த தகவலை சாமிநாதனின் மகள் தெரிவித்துள்ளார்.