தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர் என்கிற ஒரு நிலையான இடத்தை அடைந்தபிறகு, தனக்கு ஆர்வமிருக்கும் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் என்பது நாம் அறிந்தது தான்.

அதிலும் இவர் கால் பாதிக்கும் இடத்தில் எல்லாம் வெற்றி என்றே கூறலாம். அண்ணா பல்கலைகழக மாணவர்கள், அஜித் மேற்பார்வையில் உருவாக்கிய ஆள் இல்லா விமானம் பல்வேறு சாதனைகளை படைத்தது. பரிசுகளையும் வென்று குவித்தது.

இதை தொடர்ந்து சமீப காலமாக அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டி வருவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதையும் தாண்டி மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றார். 

இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் டெல்லியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், துப்பாக்கி சுடும் வீரர் வீராங்கனைகள் பயிற்சி எடுத்தார். இதுகுறித்த சில புகைப்படங்கள் அதிக அளவில்  சமூகவலைதளத்தில் வட்டமிட்டன. அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் அஜித் பங்கேற்றுள்ளார். அதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ப்ரீ பிரிஸ்டல் பிரிவில் 8வது இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் 9வது இடத்தையும், ஸ்டாண்டர்டிஸ் பிரிஸ்டல்  பிரிவில் 12 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவைத் தாண்டி துப்பாக்கி சுடுதலிலும் மொத்தம் மூன்று பிரிவுகளில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ள அஜித்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.