Tamil actor plays dual role in his new movie
தல அஜீத் மற்றும் சிறுத்தை சிவாவின் கூட்டணியில், விவேகம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ”விஸ்வாசம்”. இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜீத்துடன் மீண்டும் இணையவிருக்கிறார். ரோபோ சங்கர் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் தொடக்கம் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போது மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதில் அஜீத் மீண்டும் ”சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கில் இருப்பது தான் அதற்கு காரணம்.

அஜீத் சிவா கூட்டணியில் வெளியான எல்லா படங்களிலுமே பெரும்பாலும் அஜீத் இந்த ”சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கில் தான் நடித்திருந்தார். இது குறித்து இயக்குனர் சிவா தரப்பில் பேசும்போது, இந்த படத்தில் அஜீத் இளமையான தோற்றத்தில் தான் நடிக்கவிருக்கிறார் என தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் அஜீத் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.
