இரு தினங்களுக்கு முன் தல அஜீத்தின் பிறந்த நாள் பரபரப்பாக கொண்டாடி முடிக்கப்பட்ட நிலையில் ‘யார் ஒரிஜினல் தல?’ என்ற டாபிக்கைக் கையில் எடுத்துக்கொண்டு அஜீத் ரசிகர்களும் தோனி ரசிகர்களும் மோதிக்கொண்டு வருகிறார்கள்.

‘தீனா’ படம் ரிலீஸான காலத்திலிருந்தே அஜீத் தான் ‘தல’ என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடத் துவங்கியதிலிருந்தே ‘தோனியும் செல்லமாக தல’ என்றே அழைக்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தல என்று அழைக்கப்படுவதற்கு தான் சந்தோஷப்படுவதாகவும் அதை தமிழக மக்கள் காட்டும் ஸ்பெஷல் அன்பாக எடுத்துக்கொள்வதாகவும் தோனி கூறியிருந்தார்.

இதை அஜீத்தே ரசித்திருப்பார் எனும் நிலையில் அவரது ரசிகர்களில் சிலர் ‘தல’ன்னா அது எங்க தல ஒருத்தரு மட்டும் தான் என்று லேசாகத் தூபம் போட, ...இதுல கூத்து என்னன்னா மொத்த தமிழ்நாடும் என்னை #தல ன்னு கூப்பிடுதுன்னு தோனி சொன்னது தான். சென்னை பார்டர தாண்டி வேலூர், மதுரை, தேனின்னு போயி இத சொல்லிடாதய்யா @msdhoni.. செதச்சிருவானுங்க.. என்று கமெண்ட் போட பதிலுக்கு தோனி ரசிகர்கள் உஷ்ணமாகிவிட்டார்கள்.

பதிலுக்கு அஜீத் ரசிகர்களைக் கலாய்த்த தோனி ரசிகர்கள்...அன்பின் அஜித் ரசிகர்களே...அஜித்த கொண்டாடுங்க வேணாங்கல, அது உங்க விருப்பம்.ஆனா, தல பட்ட பிரச்சனைல டோனிய கீழ்த்தரமாக விமர்சிக்காதிங்க...ஏன்னா, 2ஸ்டேட் தள்ளி போனா அஜித்த யார்னேயாருக்கும் தெரியாது ...ஆனா,டோனிய இந்தியா முழுசும் மட்டுமல்ல, உலகம் முழுசுமே தெரியும்! என்று மரணபங்கம் செய்து வருகிறார்கள்.