விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன் நடித்துள்ளார். முன்னதாக வெளியான பாடல்கள், டீசர் அனைத்துமே டிரண்டிங்கில் சாதனை படைத்தது. 

படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், விஸ்வாசம் ரிலீசை திருவிழாவாகக் கொண்டாட அஜித் ரசிகர்கள் எப்போதோ தயாராகத் தொடங்கி விட்டனர். பல்வேறு இடங்களில் அஜித்திற்கு மிகப் பிரமாண்டமான கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சினிமா வரலாற்றில் முதல் முறையாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு எல்.இ.டியில் ஒளிரும் வகையில் டிஜிட்டல் கட் அவுட் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் இவ்வளவு பெரிய LED பேனர் வச்சது இல்ல... அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வருமாறு இடம்பெற்றுள்ளன.