பிளாஸ்டிக் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்களை கொண்டு அஜித்தின் பேனரை உருவாக்கியுள்ளனர். இது, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை பாராட்டிய ரோஹினி திரையரங்கம், இந்த பேனர் நல்ல நிலையில் இருக்கும் வரை தங்கள் திரையரங்கில் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.
‘விஸ்வாசம்’ ரிலீஸுக்குப் பிறகு, ரஜினி ரசிகர்கள் கனவில் கூட அஜீத்தையும், ரஜினியையும் கம்பேர் பண்ணிப் பேசக்கூடாது’ என்று ரகஸிய உத்தரவு கொடுக்கப்பட்டு தேவையான நிதி உதவிகளும் அனுப்பப்பட்டதால்தான், கட் அவுட், பேனர் விளம்பரங்கள் வழக்கத்தை விட ஐம்பது மடங்கு அதிகமாக செய்யப்பட்டுவருகின்றன என்று ஒரு தகவல் நடமாடுகிறது.
முகநூல் உட்பட்ட வலைதளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே விஸ்வாசம் பேனர், ஃப்ளக்ஸ் பற்றிய செய்திகள்தான். திருச்செந்தூரில் 200 அடிக்கு கட் அவுட் வைத்து விஜய் ரசிகர்களின் சாதனையை முறியடித்த அதே தொண்டர்கள் இன்று 4000 அடி நீளத்துக்கு பேனர் ஒன்றைத் தயார் செய்து அதை வீடியோவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். [வீடியோ தனிச்செய்தியாக]
இன்னொரு பக்கம் இலங்கையில் நடுக்கடலில் ‘விஸ்வாசம்’ பேனர்களை நட்டு வெளிநாட்டுத்தமிழர்களும் தங்கள் அஜீத் விஸ்வாசத்தைக் காட்டிக்கொண்டிருக்க, திண்டிவனம் ரோஹினி திரையரங்கில் அஜித்தின் ரசிகர்கள் புதுவிதமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். பிளாஸ்டிக் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்களை கொண்டு அஜித்தின் பேனரை உருவாக்கியுள்ளனர். இது, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை பாராட்டிய ரோஹினி திரையரங்கம், இந்த பேனர் நல்ல நிலையில் இருக்கும் வரை தங்கள் திரையரங்கில் இருக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.
அஜீத் ஏரியா இப்படி புதுப்புது ஐடியாக்களால் களை கட்டிக்கொண்டிருக்க, ரஜினியின் ‘பேட்ட’ ஏரியா விளம்பர சமாச்சாரங்களில் ஈ ஓட்டிக்கொண்டு பரிதாபமாக முழித்துக்கொண்டிருக்கிறது. ரசிகர் மன்றங்களில் தொடர்ந்து நடந்த களையெடுப்புகளால் ரசிகர்கள் களைப்படைந்துவிட்டதாகத் தெரிகிறது.
