ajith fans commented simbu in his twitter page
சிம்புவின் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ஜி.பி.பிரகாஷ்,சிம்புவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அழகானவன் அசராதவன்’ திரைப்படம், வரும் ரம்ஜானை முன்னிட்டு வரும் ஜுன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ‘AAA’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.பி. பிரகாஷ் குமார், படம் வெற்றியடைய தனது வாழ்த்துகளை சிம்புவிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ட்விட்டில் "என்னுடைய இனிய நண்பர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நன்றி..! ரம்ஜான் அன்று புதிய ஆச்சரியத்தை காண தயாராக இருங்கள்.சிறப்பு..!" என சிம்பு பதிவிட்டுள்ளார் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் இந்த புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். தீவிர விஜய் ரசிகரான ஜி.வி.பிரகாஷ் உடன், அஜித் ரசிகரான நீங்கள் எப்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்? எனவும் சிலர் டிவிட்டரில் சிம்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் சிம்புவை திட்டியும் ட்விட்டியுள்ளனர்.
