விஸ்வாசம் படம் பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக  உள்ளநிலையில், அஜித் ரசிகர்களுக்கு இதுதான் மாஸ் பொங்கல் என சொல்லும் அளவிற்கு  தல படத்தை தடபுடலா வரவேற்க புதுமையாக அலங்கரித்து வருகின்றனர்.  அப்படி ஒன்றில்தான் சேலத்தில் அவரது ரசிகர்களால் வைக்கப்பட்டு இருக்கும் LED  பேனர்.

இதற்கு முன்னதாக, சர்கார் பட ரிலீசின் போது கேரளாவில் கொல்லம் நண்பன்ஸ் என்ற விஜய் ரசிகர்கள் 175 அடி கட்-அவுட் வைத்து கொண்டாடினர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அஜித்திற்கு 200 அடி நீள பேனர் வைத்தனர்.

 வித்தியாசமாக சென்னை ரோகினி திரையரங்கில் வாட்டர் பாட்டில்கள் மட்டுமே வைத்து அஜித் பேனர் வைத்துள்ளனர்.  அதேபோல, மதுரையை சேர்ந்த ரசிகர்கள் பிரபல தியேட்டர் ஒன்றில் தியேட்டர் ஹைட்டிற்கு பேனர் பேனர் தயார் செய்து வைத்துள்ளனர்.

இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சினிமாவரலாற்றில் முதல்முறையாக கடலுக்கு படகில் சென்று அங்கும் பேனர் வைத்துள்ளார் அஜித் ரசிகர்கள். இவர்கள் ரசிகர்களா இல்ல அஜித்தின் வெறியர்களா கேட்கும் அளவிற்கு புதுமையை செய்து வருகின்றனர்.

நடுக்கடலில் பேனர் காட்டி கடல் ராஜாக்களான சுறா, திமிலங்களை வெறுப்பேத்த இப்படி செய்கிறார்களா எனக்கேட்டால், ஓவராக பில்டப் பண்ணும் ரஜினியின் ‘பேட்ட’ டீமை வெறுப்பேற்றவே இப்படி செய்வதாக சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்களோ அஜித் ரசிகர்களை சமாளிக்க முடியாமல் சோர்ந்துபோய் உள்ளார்களாம்.