'குட் பேட் அக்லி' திரையிடப்பட்ட திரையரங்கில் விஜய் ரசிகர்களின் செயலால் கடுப்பாகி தல ரசிகர்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து வெளுத்து வாங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்து ரிலீசான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், 'குட் பேட் அக்லி' பின் வாங்கியது.
கடைசியில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முக்கிய காட்சி எஞ்சி இருந்த நிலையில், 'விடாமுயற்சி' பொங்கலுக்கு ரிலீசாகவில்லை என லைக்கா நிறுவனம் அறிவித்தது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விடாமுயற்சி' முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற துவங்கியது. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

இப்படம் ரசிகர்களை ஏமாற்றிய போதிலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த 'குட் பேட் அக்லி ' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி உள்ள இந்த படம், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக அளவில் முதல் நாளே ரூபாய் 30.9 கோடி வசூல் செய்த குட் பேட் அக்லி... இரண்டாவது நாளில் உலக அளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் குட் பேட் அக்லி' படம் பார்க்க வந்த தளபதி ரசிகர்கள், திடீர் என எழுந்து நின்று TVK... TVK... என கத்தி கூச்சலிட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் அவர்களை அடித்து துவைத்துள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்றை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. "அதில் சமீப காலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்க போவது உறுதி என பதிவிட்டுள்ளார்.
