அஜித் படங்கள் வரும்போது விஜய் ரசிகர்களும், விஜய் படங்கள் வெளியாகும்போது அஜித் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுவதுக் கொள்வது கால காலமாக உலகம் சந்தித்து வரும் பிரச்னை. விஸ்வாசம் படம் ரிலீசாக உள்ள நிலையில் அந்தக் கலகத்தை முன்னணி திரையரங்கம் ஆரம்பித்து வைத்து அதகளப்படுத்தி வருகிறது.  
 
அஜித், விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதல் அவ்வப்போது இணையதளத்தை செம ஹாட்டாக்கி வருகிறது.  அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்தப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிக முக்கியமான திரையரங்கமான நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் அடுத்த சரவெடியை கொளுத்திப் போட்டிருக்கிறது. பொதுவாக எப்போதும் அனைத்து நடிகர்களின் படங்களையும் கொண்டாடுவடு இந்தத் திரையரங்கத்தின் வழக்கம்.

 

அதிலும் விஜய் படம் என்றால் ஒரு படி மேலே உயர்த்திப் பிடிக்கும். இதனால் பலரும் இந்த திரையரங்க உரிமையாளரை விஜய் ரசிகர் என்று நம்பி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று விஜய் நடித்த சர்கார் 50வது நாளுக்கு ராம் சினிமாஸ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதற்கு கீழ் அஜித் ரசிகர் ஒருவர் சிரிப்பது போல் கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு ராம் சினிமாஸ் ’நாயை எட்டி உதைக்கும் வடிவேலு கமெண்ட் போட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களை கோபப்படுத்த எரிச்சலான அவர்கள் தாறுமாறாய் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து கமெண்டுகளை போட சூடாகி வருகிறது ட்விட்டர் தளம்.