பொங்கலுக்கு ரிலீசாகும் படம் விஸ்வாசம் பேட்ட படங்கள் கடும் போட்டியை சந்திக்க உள்ளது கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் ரசிகர்கள் சண்டையை பார்க்கும் போதே தெரிந்து விட்டது. இந்த போட்டி டிரெய்லரில் இருந்தே தொடங்கிவிட்டது. 28ம் தேதி வெளியான பேட்ட  வெளியானது.

 ஒரு நாள் இடைவேளையில்  விஸ்வாசம்  டிரெய்லரும் வெளியாகி டிரெய்லரை யூடியூபில் பழைய ரெக்கார்டை முறியடித்து முதலிடத்திற்கு கொண்டு வந்தனர். பேட்ட படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு கவுன்டர் கொடுப்பது போல் அமைந்திருத்த விஸ்வாசம் டிரெய்லர் வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

நேற்று ட்ரைலர் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்துக்கான போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை வைத்து முடித்து விட்டனர். சிங்கிள் ஸ்க்ரீன் உள்ள  தியேட்டர்களில் முதல் நாளுக்கான அனைத்துக் காட்சிகளின் மொத்த டிக்கட்டுகளை அதிக விலை கொடுத்து அஜித் ரசிகர் மன்றம் வாங்கியுள்ளார்களாம்.

கடந்த இரண்டு வருடங்களில், கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் பெரிதும் கம்பி நீட்டியதால் பேட்ட படத்திற்கு இது போன்று எந்த எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் செயல்படவில்லை. சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித்தை திரையில் பார்க்க இருப்பதால் பேட்ட படத்தைக் காட்டிலும் விஸ்வாசம் முன்னணிக்கு வந்துள்ளது.

அஜித்  தனது பெயரில் உள்ள ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னரும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவரது ரசிகர்கள் அஜித் பட வெளியீட்டின் போது, திரையரங்குகள், பொது இடங்களில் பேனர், போஸ்டர்  அதகளம் பண்ணுவது வியப்பை ஏற்படுத்துகிறது.