தல அஜித், ஒரு சில காரணங்களால் திரைப்படம் நடிப்பதோடு நிறுத்தி கொண்டு, அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட தவிர்த்து விடுகிறார். இதனால் எந்த பிரச்னையும் வர கூடாது என்பதற்காக, முன்னதாகவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம், திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டுத்தான் படங்களில் நடிக்க கமிட் ஆகிறார்.

ஆனால், ஒருகாலத்தில் தன்னுடைய அணைத்து படங்களில் ப்ரோமோஷன்கள், மற்றும் அணைத்து திரைப்பட விழாக்களிலும் விட்டு கொடுக்காமல் கலந்து கொண்டவர் தான் தல. இவரை இப்படி மாற்றியது சூழ்நிலை என்று கூட கூறலாம்.

இந்நினையில் இவர், எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் இருந்த போது கூட, சில வருடங்களுக்கு முன், பிரபல தொலைக்காட்சி ஒன்று, டான்சர்ஸ், மற்றும் சண்டை பயிற்சியாளர்களை பெருமை படுத்தும் விதமாக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, டான்ஸர்ஸ் மற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்காக தான். படப்பிடிப்புக்கு செல்லும் போது, அவர்கள் தான் தங்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என பெருமையாக பேசினார். அஜித் சிரித்து, சிரித்து பேசியது மீண்டும் அஜித் திரும்ப இப்படி பேச மாட்டாரா என தல ரசிகர்களையே ஏங்க வைத்து விட்டது.

மேலும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென ரசிகர்கள் அவரை குட்டி டான்ஸ் ஆடும்படி கூற, 'வில்லன்' படத்தில் வந்த பாடலுக்கு மேடையில் ஒரு சில ஸ்டெப்புகளை போட்டார். ‘நான் ரொம்ப பந்தா காட்ட விரும்பவில்லை, இதுவே போதும்’ என்று நாசுக்காக அந்த இடத்தில் இருந்து நகரத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ