ajith change the youth getup
கடந்த சில வருடங்களாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கோலத்தில் புதிய டிரன்டை ஏற்படுத்திய அஜித், அடுத்ததாக நடிக்க உள்ள 'விசுவாசம் படத்திற்காக தற்போது இளமைத் தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதனை நிருபிக்கும் விதத்தில் தற்போது ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே சிவா இயக்கிய மூன்று படங்களிலும் தொடர்ந்து அஜித் 'சால்ட் அண்ட் பெப்பர் ' தோற்றத்தில் தான் பிரதிபலித்தார் ஆனால் தற்போது அதனை மாற்றியுள்ளார் சிவா. விவேகம் படம் முடிந்த பிறகு சில காலம் வீட்டில் ஓய்வில் இருந்த அஜித் சற்று எடை கூடிவிட்டதால் அடுத்து நடிக்க உள்ள விசுவாசம் படத்திற்காக எடையை குறைத்து வருகிறாராம்.
இந்தப் படம் 90 % சென்னையை சுற்றி தான் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்தப் படத்தில் அஜித் வட சென்னை பாஷை பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித் தாதாவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் தொடங்க உள்ள விசுவாசம் படத்தின் படப் பிடிப்பில் கலந்துகொள்ள மும்முரமாக தயாராகி வரும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷ் பரிசீலிக்கப்பட்டதாகவும் பின் சில காரணத்தால் அவரை தவிர்த்து விட்டு இந்தப் படத்தின் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
