ஊடகங்களுக்குத் தரப்படும் படங்கள் மற்றும் விளம்பர டிசைன்களில் என்னுடைய சோலோ படம் மட்டும்தான் இடம்பெறவேண்டும். குறிப்பாக நயன் தாரா படங்கள் தரக்கூடாது’ என்று இயக்குநர் சிவாவுக்கும், தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனுக்கும் அஜீத் கறாரான உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

‘விஸ்வாசம்’ படத்தில் மிகுந்த சிலாகிப்புக்கு ஆளாகியிருப்பது நயன், அவரது மகள்,அஜீத் இணைந்து வரும் காட்சிகள்தான். இந்தக் காட்சிகளில் அஜீத்தைவிட நயன் ஒரு 50 சதவிகிதம் அதிகமாகவே ஸ்கோர் பண்ணியிருப்பார். இதனால் படம் குறித்து எழுதப்படும் விமர்சனங்களில் அல்டிமேட்டுக்கு இணையாக நயன் தாராவும் பாராட்டப்படுகிறார்.

அவற்றைப் படித்து சற்று அப்செட்டான அஜீத், இனிமே எந்த விளம்பர டிசைனாக இருந்தாலும் அதில் சோலோவாக தனது ஸ்டில் இருந்தால் போதும். இது அஜீத் படம்தான். தியேட்டருக்கு வரும் மக்கள் எனக்காக வருகிறார்களே ஒழிய நயனுக்காக வரவில்லை என்பது ஞாபகமிருக்கட்டும் என்கிறாராம்.

இதனால் படத்தின் நாயகி நயன்தாரா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். படத்தில் அவருடைய வேடத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த நற்பெயர் கிடைத்திருக்கும் நேரத்தில் விளம்பரங்களில் அவருடைய படத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது அவருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.