நடிகர் பிரித்விராஜ் அஜித்துடன் ‘அவள் வருவாளா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர். கடந்த ஆண்டு அஜித் மற்றும் சூரியா பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இணையத்தில் வைரலானது. பிரித்விராஜ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித்துடன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஆரம்பத்தில் அஜித்தை அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். 

சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்ற நடிகர் பிரித்விராஜ், ஷாலினி அஜித் உடனான ஒரு சமீபத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அதில், அவர், ‘’அஜித் உண்மையான மனிதர். அவர் திரைத்துறையில் உள்ள சகோதரத்துவமான ஒரே மனிதர். லாக்டவுனுக்கு முன் ஷாலினி அஜித் மற்றும் அவரது மகள் அனௌஷ்கா ஆகியோரும் உணவருந்திக் கொண்டிருந்த உணவகத்தில் சாப்பிடச் சென்றேன்.  என்னுடன் நடிக்காததால் ஷாலினி பேச தயங்கியுள்ளார். இப்படி மூன்று முறை நடந்தது.

மூன்றாவது முறையாக, ஹோட்டல் மேனேஜர் என்னை அழைத்து ஷாலினி எனது போன் நம்பரைக்கேட்டதாகக் கூறி வாங்கினார். நானும் எனது நம்பரை கொடுத்தேன். அடுத்த கணம் ஷாலியிடம் இருந்து அழைப்பு வந்தது. ’ஹோட்டலில் உங்களை பார்த்தும் பேசவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார். உங்களை பார்த்ததாகவும், ஆனால் பேசவில்லை என்றும் அஜித்திடம் சொன்ன போது, அவர் மிகவும் வருத்தப்பட்டார். “ஒரு மூத்த நடிகர், எனது நண்பர் மற்றும் ஸ்கூல் சீனியர் என்றும், கண்டிப்பான அவரிடம் நீ போய் பேசியிருக்க வேண்டும்” என்று அஜித் வருத்தப்பப்பட்டதாகவும், ஷாலினி என்னிடன் கூறி ஷாலினி மன்னிப்பு கேட்டார்’’எனக் கூறினார்.

“அவர் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது அவரது வளர்ப்பையும் வகுப்பையும் காட்டுகிறது. அவர் ஒரு சிறந்த மனிதர்” என்று பிருத்விராஜ் தெரிவித்தார்.