தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பினிங் கொடுக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விவேகம் திரைப்படம், கபாலி, பாகுபலி, தெறி ஆகிய படங்களின் சாதனையை முறியடித்து தற்போதுவரை ரசிகர்களின் ஆதரவை பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 'தல' அஜித்துக்கு, விவேகம் பட படப்பிடிப்பின் போது கால், கை, தோல்பட்டை ஆகிய இடங்களில் ஒரு சில ஆழமான காயங்கள் ஏற்பட்டதாம். ஏற்கனவே அந்த காயத்திற்காக அஜித் மருந்துகள் எடுத்துக்கொண்ட போதிலும். மருத்துவர்கள் தோல்பட்டையில்  அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தியதால். 

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அஜித் சேர்க்கப்பட்டு. அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மேலும் தற்போது அஜித் அறுவைசிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவருடைய தரப்பில் இருந்து கூறப்படுகிறது.