அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த, 'பிங்க்' படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கிய இயக்குனர், எச்.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் 'வலிமை' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

60ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. 

இதை தொடர்ந்து படக்குழுவினர் சுவிஸ்சர்லாந்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. அங்கு அஜித்தின் அதிரடி காட்சிகள் மற்றும் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை செம்ம குஷியாக்கி உள்ளது.

இந்த படத்தில் அஜித் போலீஸ் ஆபீஸராக நடித்து வருவதாகவும், காலா படத்தில், ரஜினிக்கு காதலியாக நடித்த 'ஹீமோ குரோஷி' கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.