ajith acting prabudeva direction
விசுவாசம்:
தல அஜித் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், விசுவாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. 
வினோத் இயக்கத்தில் அஜித்:
விசுவாசம் படத்தை தொடர்ந்து, சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு சில தகவல்கள் வெளியானது.

பிரபுதேவா இயக்கத்தில் அஜித்:
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்... சமீபத்தில் அஜித்தை சந்தித்து பிரபுதேவா ஒரு கதை கூறியதாகவும், இந்த கதை அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதால். இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறு அஜித் பிரபுதேவாவிடம் கூறியதால் தற்போது இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை பிரபுதேவா தயார் செய்து வருகிறாராம். 
அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வி இருந்த நிலையில், ஒருவேளை பிரபுதேவா படத்தில் அஜித் நடித்தால் பிரபுதேவாவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
