Ajith 63 movie update: வலிமை வெற்றியை தொடர்ந்து, கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு,மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக தற்போது, அஜித் 63 படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
வலிமை வெற்றியை தொடர்ந்து, கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு,மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக தற்போது, அஜித் 63 படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அஜித்தின் நடிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் திரையங்குகளில் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் 200 கோடியை கடந்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
அஜித் 61 :

இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை பகுதியில், செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
அஜித் 62 :

அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படத்தின் தகவல் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவாகும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய முக்கிய தகவல்இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் 63 படம் குறித்த தகவல்:

அஜித் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில், ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் படங்களில் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவாவுடன் அஜித் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.
ஏற்கனவே, கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு, மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக தற்போது, அஜித் 63 படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

அதாவது, அஜித்தின் 63வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்க உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், அஜித்தின் 63 வது படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
