ajith 59 th movie is mangatha
கடந்த 2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தி இருப்பார்.
மேலும் இந்த திரைப்படம் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த பில்லா, மங்காத்தா ஆகிய இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்ததால் தொடர்ந்து இதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இந்நிலையில் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் அஜித் அவருடைய 59 வது படத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர் என மோகன்ராஜாவிற்கும் நல்ல பெயரை தேடித்தந்தது.

இந்நிலையில் அஜித்தின் 59 வது படத்தை மோகன்ராஜா இயக்குவதற்கு பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், இதை உறுதிப்படுத்தும் வகையில் அஜித்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நெகடிவ் ரோலில் கதை எடுக்க காத்திருப்பதாக மோகன்ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அஜித்தின் அடுத்த படம் மோகன்ராஜாவின் இயக்கத்தில் அதுவும் மங்காத்தா 2 வாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
