தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்துள்ள விசுவாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் மோதுகிறார் அஜித் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இந்நிலையில் அஜித் அடுத்ததாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அஜித்தின் 59 ஆவது படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாவும், நிரவ்ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார் என்றும் முடிவாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் அஜித் நடிக்க முக்கிய காரணம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தானாம். ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் அஜித் கெஸ்ட்ரோலில் நடித்தபோது, கண்டிப்பாக தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தமிழ் படம் நீங்கள் நடிக்க வேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டதால். அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக தற்போது அவருடைய கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் அஜித். 

இப்படம் தல பிறந்தநாளான மே1ம்தேதி வெளியாகவுள்ளதாகவும் படத்தின் பூஜையில் போனி கபூர் தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் ஆசை நிறைவேறியதால் கண்கலங்கியதாகவும் கூறப்படுகிறது.