ajith 58th movie director leeked

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் விவேகம் படத்தில் படப்பிடிப்பே என்னும் நிறைவடைய வில்லை அதற்கும் அவர் தன்னுடைய 58 வது படத்தை யார் இயக்கத்தில் நடிப்பார் என யூகிக்க ஆரமித்து விட்டனர்.

அடுத்த படத்தில் அஜித் தங்களுடைய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என்கிற ஆசையில், பல இயக்குனர்கள் அவர் சென்னை வந்த போது கதை சொல்லியதாக கூறப்படுகிறது.

தற்போது விவேகம் படத்தின் இறுதி படப்பிடிப்பில் பாங்காங்கில் உள்ள அஜித் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் யார் என்றால் .. அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் அவரின் 58வது படத்தை இயக்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுத்தாளர் பால குமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் சோழ ராஜ்ஜியம் பற்றிய ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் அந்த கதையில் அஜித் நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.