சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் 57வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார்.

மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் 3 வாரங்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் அடுத்த வருடம் 2017ம் ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என படக்குழுதான் சொல்ல வேண்டும்.