‘நான் ஒரு நடிகரைக் காதலிப்பதாக வரும் செய்திகளை தயவு செய்து யாரும் நம்பாதீர்கள். இன்னும் நான் சிங்கிள்தான்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிப் பரவும் வதந்திகளுக்கு பதில் அளித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

’கனா’ஹிட்டுக்கு அப்புறம் முன்னணி நடிகைகளுல் ஒருவராக மாறியிருக்கும் ஐஸ்வர்யா அடுத்து சிவகார்த்திகேயன் படம், ‘கறுப்பர் நகரம்,’மகளிர் அணி,’மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ உட்பட பல படங்களில் பிசியாக இருக்கிறார். இதுவரை அவரைப் பற்றி தவறான கிசுகிசுக்கள் எதுவும் பரவாத நிலையில் கடந்த ஒரு சில திங்களாக அவர் ஒரு தம்பி நடிகரைக் காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவின.

இச்செய்திக்கு துவக்கத்தில் மவுனம் சாதித்த ஐஸ்வர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்,...``ஹாய் ஃப்ரண்ட்ஸ் .... சில தினங்களாக எனது காதல் கதை குறித்த வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பதையும் சொன்னால் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன், இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்புவதை தயவு செய்து முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் இப்போது சிங்கிளாக இருப்பதிலேயே சந்தோஷமாக இருக்கிறேன்" என ட்விட் பண்ணியுள்ளார்.