200 கிலோ தங்க நகைகளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா ராய்! டிசைன் செய்தவர்கள் யார் தெரியுமா?
'ஜோதா அக்பர்' படத்தில் ஐஸ்வர்யாவின் நகைகளை தயாரிப்பதற்கு மட்டும் 70 கைவினை கலைஞர்கள் வேலை செய்துள்ளனர். படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த திருமண நெக்லஸ் மூன்றரை கிலோவுக்கும் அதிகமாக எடை கொண்டது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 'ஜோதா அக்பர்' படத்தில் அணிந்திருந்த நகைகள் திடீரென நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்தப் படத்தில் அவர் சுமார் 200 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து நடித்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசுதோஷ் கோவாரிகர் இயக்கிய 'ஜோதா அக்பர்' திரைப்படம் முகலாய பேரரசர் அக்பர் மற்றும் அவரது இளவரசி ஜோதா பாய் ஆகியோரின் காதல் கதையைக் கூறுகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பை விட அவரது தோற்றம் அதிகம் விவாதிக்கப்பட்டது.
மணப்பெண்கள் மத்தியிலும் ஐஸ்வர்யா ராயின் தோற்றத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆடை முதல் நகைகள் வரை அனைத்துமே ஃபேஷன் உலகில் ட்ரெண்ட் செட் செய்தன.
ஷாலினி ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்! அவங்க இந்த ஒண்ணு மட்டும் செய்ய கூடாது! சபிதா ஜோசப் அட்வைஸ்
'ஜோதா அக்பர்' படத்திற்காக ஐஸ்வர்யா ராய் சுமார் 200 கிலோ தங்கத்தை அணிந்திருந்தாராம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹிருத்திக் ரோஷனுக்காக செய்யப்பட்ட நகைகள் முகலாய மற்றும் ராஜஸ்தானி டிசைன்களின் கலவையாக இருந்தன. 400 கிலோ தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட அவர்களின் அற்புதமான நகைகளை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனதாம்.
'ஜோதா அக்பர்' படத்தில் ஐஸ்வர்யாவின் நகைகளை தயாரிப்பதற்கு மட்டும் 70 கைவினை கலைஞர்கள் வேலை செய்துள்ளனர். படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த திருமண நெக்லஸ் மூன்றரை கிலோவுக்கும் அதிகமாக எடை கொண்டது. அந்த சீன்களுக்காக ஐஸ்வர்யா அணியும் நகைகள் முகலாயர் காலத்தில் இருந்ததைப் போலவே செய்யப்பட்டன. அந்த காலத்தின் பல பழைய ஓவியங்கள் நகைகளை தயாரிப்பதற்கு பயன்பட்டன.
படம் முழுவதும், ஐஸ்வர்யா ராய் சுமார் 200 கிலோ அசல் தங்க நகைகளை அணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தங்கம், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட இந்த நகைகளை பாதுகாக்க 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களாம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நகைகள் அணிவது மிகவும் கடினமான பணியாக இருந்தது என்று ஐஸ்வர்யா ராயே ஒருமுறை கூறியிருந்தார். 2008இல் வெளியான 'ஜோதா அக்பர்' படத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!