கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று முடிவடைய உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பெரிதாக ஆர்வம் காட்டாத ரசிகர்கள் கூட, தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி, ஜனனி ஆகியோருக்கு 10 லட்சம் பணத்தோடு தானாக வெளியேற பிக்பாஸ் ஒரு வாய்ப்பு கொடுத்தது.

திடீர் என பிக்பாஸ் வீட்டை நோக்கி 10 லட்சம் ரூபாய் பறந்து வந்தது. இந்த போட்டியில் கண்டிப்பாக தான் தோற்று விடுவேன், என நினைக்கும் போட்டியாளர் ஒருவர் இந்த 10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு, வெளியே வரலாம் என கமல் அறிவித்தார்.

இதை கூறியதும், ஐஸ்வர்யா... கண்டிப்பாக நான் வெற்றியாளர் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த 10 லட்சம் ரூபாய் தனக்கு போதும். நான் வெளியே செல்கிறேன் என தெரிவித்தார்.

ஐஸ்வர்யா இப்படி கூறியது, போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல... இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ஒரு வேலை இந்த 10 லட்சம் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பணத்தில் இருந்து கொடுக்கப்பட்டால், நான் இங்கேயே இருப்பேன் என கூறினார். எனினும் வெளியே செல்லவும் தயாராக இருந்தார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவை வெளியேற்ற மனம் இல்லாத பிக்பாஸ், இந்த 10 லட்சம் ரூபாய்... வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் 50 லட்சம் பணத்தில்  இருந்து தான் கொடுக்கப்படும் என திடீர் ட்விஸ்ட் வைத்து , ஐஸ்வர்யாவை தன்னுடைய முடிவில் இருந்து பின் வாங்க வைத்துவிட்டது.