பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. திடீர் திடீர் என போட்டியாளர்கள் மனநிலை மாரி வருவதால் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டாக இருக்குமோ என ரசிகர்களே தனங்களுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் முதல் முறையாக மற்ற போட்டியாளர்களின் பாசிட்டிவ் குணங்கள் மற்றும், அவர்களிடம் தங்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள்.

 

இந்த ப்ரோமோவில் முதலாவதாக பேசும் யாஷிகா, ரித்விகா யாருக்கும் பாகுபாடு இன்றி செயல்படுவதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து பேசும் ரித்விகா, தனக்கு ஐஸ்வர்யாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கள்ள கபடம் இல்லாத சிரிப்பு என்றும், பிக்பாஸ் வீட்டிலேயே உன் சிரிப்பு தான் பெஸ்ட் சிரிப்பு என கூறுகிறார். எப்போதும் தன்னை பற்றி மோசமாக பேசும் போட்டியாளர்கள் முதல் முறையாக பாசிட்டிவாக பேசும் விஷயத்தை ஐஸ்வர்யா ரசிக்கிறார்.

இவரை தொடர்ந்து பேசும் விஜி, தமிழ் பெண்கள் என்றால் பொறுமையாக இருப்பது நல்ல விஷயம். இதே தமிழ் பெண்கள் தான் வீரத்தையும் காட்டியுள்ளார்கள். போட்டி என்று வந்தால் வீரம் காட்டாமல் சற்று பின் வாங்குவது போல் உள்ளது என ரித்விகா மற்றும் ஜனனியை பார்த்து கூறுகிறார். இதன் மூலம் தமிழ் பெண்கள் என பாகுபாடு பார்த்து விஜி ஓவராக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை ஓரம்கட்டுகிறார் என தோன்றுவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.