Aishwarya Share her Experience about Rajinikanth Lal Salaam Movie:கோவாவில் 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று லால் சலாம் படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், லிவிங்ஸ்டன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் லால் சலாம். கிட்டத்தட்ட 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இருந்த போதிலும் கடந்த 20ஆம் தேதி கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான இன்று ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சினிமா துறையில் 50 ஆண்டுகால சாதனையை பறைசற்றும் விதமாக கோவா 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அபோது பேசிய ரஜினிகாந்த் மத்திய அமைச்சர் முருகன் உள்பட அனைவருக்கும் நன்றி. என்ன வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்கள்.
விழா நிகழ்ச்சியின் போது பேசிய ரன்வீர் சிங் ரஜினிகாந்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. டைகர் ஹா ஹூக்கூம். ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். எனக்கு சினிமாவும், நடிப்பும் ரொம்பவும் பிடிக்கும். அந்த இரண்டையும் நான் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது லால் சலாம் படம் திரையிடப்பட்டது. அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா தனது அப்பா ரஜினிகாந்தை இயக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் பயணம் முழுவதும் கஷ்டங்களையும் அனுபவங்களையும் கொடுத்தது. இந்தப் படத்தை உருவாக்குவது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
எனினும், என்னுடைய அப்பா ஒரு சிறந்த அடித்தளமாக இருந்தார். உண்மையில் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படத்திற்காக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய குழுவினருக்கு அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

