பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிகபடியாக 8 ஓட்டுக்களைப் பெற்று, முதல் தலைவி என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் பிரபல நடிகை ஜனனி ஐயர். இவர் தலைவி என்கிற பொறுப்பை சரியான முறையில் நிர்வாகம் செய்வாரா என முதலில் ரசிகர்களுக்கே ஒரு சந்தேகம் இருந்தது. பின் இவரின் நிர்வாக திறனை பார்த்து இவர் நல்ல முறையில் பிக்பாஸ் குடும்பத்தை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரையிடாத காட்சிகளை ஒலிப்பரப்பும் மிட் நைட் மசாலாவில், நடிகர் பொன்னம்பலம் ஜனனியின் பார்க்க இப்படி இருக்கிறாரே... 15 பேரை எப்படி சமாளிப்பார் என தோன்றியது. ஆனால் சிறப்பாக தலைவி என்கிற பணியை செய்வதாக தெரிவித்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவான நடிகை ஐஸ்வர்யா தத்தா, வீட்டின் தலைவி ஜனனியை அழவைதுள்ளர்.

நேற்று மும்தாஜ், ரம்யா, ஆகியோருடன் ஜனனி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யாவை பார்த்து ஜனனி செல்லமாக போடி... என கூறி சிரிக்கிறார். உடனே ஐஸ்வர்யா அவரின் கொஞ்சும் தமிழில் இவங்க ரொம்ப கேவலமானவங்க என்று கூறுகிறார்.

உடனே மும்தாஜ் மிகவும் ஷாக் ஆகினார். பின் ரம்யா 'கேவலம்' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை ஐஸ்வர்யாவிற்கு புரிய வைக்கிறார். உடனே ஐஸ்வர்யா அப்போ சாரி நேற்று நீங்க போட்ட ரவுடி  கதாபாத்திரத்தை கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். 

பின் ஜனனி, கிட்ட வா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா எதுவும் சொல்ல வேண்டாம் என கூற, ஜனனி உன் நல்லதுக்காக தான் சொல்ல போவதாக கூறி... பின் உன்னுடைய இஷ்டம் என சொல்லிவிட்டார்.

உடனே ஐஸ்வர்யா நீ என்னை டீ மோட்டிவேட் செய்வதாக ஜனனியிடம் தெரிவிக்கிறார். பின் அவரை மும்தாஜ் சமாதானம் செய்கிறார். 

இதைத்தொடர்ந்து ஜனனி, ரம்யாவிடம் இப்போது புரிகிறதா எது சொன்னாலும் தவறாக எடுத்து கொள்கிறார்கள். என கூறி அழ துவங்கிவிட்டார். பின் தான் எது சொன்னாலும் அதை தவறாக எடுத்து கொள்கிறார்கள் என்று ஜனனி அழும் போது, ஐஸ்வர்யா மீண்டும் ஜனனி மீது சில தவறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு ஜனனி நீ எது சொன்னாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆங்கிலத்தில் பாட கூடாது என்று கூறியதால் உன்னை பாட வேண்டாம் என கூறியதாக சொன்னார். 

உடனே ஐஸ்வர்யா கடைசியாக தான் அணிந்திருந்த உடை ட்ரான்ஸ்பரன்ட்டாக இருந்ததாக ஏன் நீங்கள் கூற வேண்டும், ஆடை விஷயத்தில் கட்டுப்படுத்தினால் தனக்கு பிடிக்காது என்பதையும் கூறுகிறார். இதற்கு ஜனனி இதை நான் உங்களிடம் கூறவில்லை இங்கு இருக்கும் ஒரு பையன் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை பற்றி உங்களிடம் கூற சொன்னதால் ஒரு தலைவியாக தான் கூறியதாக கூறுகிறார். மேலும் அவர் யார் என தன்னால் கூற முடியாது என்றும் கூறிவிட்டார் ஜனனி. 

பின் நான் உங்கள் பின்னால் சென்று கமெண்ட் செய்யவில்லை, உங்கள் முகத்திற்கு முன்பு தான் கூறுகிறேன் என கூற இந்த சண்டை முடிவிற்கு வந்தது.