நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  சைலண்டாக இருந்து வெயிட்டான திரைப்படங்களில் நடித்து, முன்னணி கதாநாயகி என்கிற இடத்தை பிடித்து விட்டார். நயன்தாராவிற்கு அடுத்து இவருடைய படங்கள் தான் வசூலில் சாதனை படைத்து வருகிறது.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் திரையுலகை தாண்டி மற்ற மொழி படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் ஏற்கனவே மலையாளத்தில் 'Sakhhavu' , ஹிந்தியில் 'daddy ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். 

நடிகர் உதயகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை, விஜய் ஆன்டனியின் 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். இன்னும் பெயரிடல் இருந்த இந்த படத்திற்கு தற்போது 'மிஸ்மேட்ச்' என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். 

மேலும் தெலுங்கில் நடிகர் விஜய்தேவார கொண்டாவிற்கு ஜோடியாவும், விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.