aishwarya rai wear butterfly dress in cannes award function

 பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2018 ஆம் ஆண்டின், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டுள்ளனர். 

பெண் கலைஞர்களுக்கான இந்த விசேஷ அரங்கில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், பட்டாம் பூச்சியைப் போல வண்ண ஆடையில் வந்தார். ஊதா நிறத்தில், பட்டாம் பூச்சியின் இறகில் அழகாக இருக்கும் டிசைன் போல இந்த ஆடை முழுவதிலும் கண்ணை கவரும் விதத்தில் பல டிசைன்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் இதில் பல வண்ணத்தில் கற்களும் பாதிக்கப்பட்டிருந்தது. 

இவர் இந்த ஆடையில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அழகு அனைவரையும் கவர்ந்தது. இதன் மூலம் பல இளம் நடிகைகளையே ஓரம் கட்டினார் ஐஸ்வர்யா ராய் என்று கூறலாம். 

மேலும் இந்த விழாவில், நடிகைகள் சல்மா ஹயக், கேட் பிளான்செட், கிறிஸ்டின் ஸ்டீவர்ட், மாரியன் காட்டிலார்ட் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பங்கேற்ற இந்த அரங்கில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் தந்து பரபரப்பை ஏற்படுத்திய 82 நடிகைகள் சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்ட படிக்கட்டுகளில் ஏறினர். இவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களின் ஒற்றுமையை வலியுறுத்தினர்.

நேற்றைய தினம் நடிகை தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியான ஆடைகளில் வந்து, பலரது விமர்சனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.