1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மோகன் லால், பிரகாஷ் ராஜ்,  கௌதமி, தபு, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான 'இருவர்' திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் அரசியல் மற்றும் சினிமாவில் கால் ஊன்றி வெற்றிபெற்ற ஜாம்பவான்களான 'எம்.ஜி.ஆர்', மற்றும் 'கருணாநிதி' அவர்களின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் அறிமுகப்படத்திலேயே புஷ்பவள்ளி, கல்பனா என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் ஐஸ். இந்த படத்திற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த அறிமுக நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்தது. 

பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்:

தமிழ் மொழியை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் கால் பதித்த நடிகை ஐஸ்வர்யா ராய் ஆரம்பத்தில் சிறு சரிவுகளை சந்தித்தாலும். தன்னுடைய அழகாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகையாக மாறினார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான, சல்மான் கான், ரித்திக் ரோஷன், அமீர்கான், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், எந்திரன், மணிரத்னம் இயக்கிய ராவணன் என சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்தார்.

திருமணம்:

இவர் 'குரு' படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் காதல்  மலர்ந்தது. ஆரம்பத்தில் தங்களுடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த இவர்கள் பின் காதலை ஒப்புக்கொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 

திருமணத்தை தொடர்ந்து நடிப்பு:

திருமணத்தை தொடர்ந்தும் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து கொடுத்தார் ஐஸ்வர்யா ராய். பின் சில காலம் இடைவேளை எடுத்துக்கொண்ட இவர் குழந்தை பெற்றுக்கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஏ தில் ஹே முஷ்கில்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் இவர் ரன்பீர் கபூருடன் மிகவும் கவர்ச்சியாக நடித்தால் அனைவராலும் விமர்சிக்கப்பட்டார். 

20 வருடம் நிறைவு செய்த ஐஸ்:

1997 ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா வாழ்கையை துவங்கிய ஐஸ்வர்யா ராய் தற்போது வரை பாலிவுட் திரையுலகில் நல்ல திரைப்படங்களையும் கதாப்பாத்திரத்தையும் தேர்வு செய்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவருக்கு பழம்பெரும் நடிகை ரேகா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர் ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து பலர் இவருக்கு வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.