விமானப்படையினரிடம் சிக்கிய விஜய்... ‘பீஸ்ட்’ படத்தின் லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டி வறுத்தெடுத்த ரியல் ஹீரோஸ்
Beast : பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கும், அதனை விமானப்படை அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். கடந்த மாதம் கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது. இப்படம் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததாக கூறி இருந்தார்.
பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் 2 ஓடிடி தளங்களில் வெளியானது. அதிலும் உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பீஸ்ட் படத்தை பார்த்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், அதன் கிளைமாக்ஸ் காட்சியில் உள்ள லாஜிக் மீறல்களை சுட்டிக்காட்டி உள்ளார்.
பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கும், அதில் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். மற்றொருவர் ஜெட் விமானத்தில் மில்டன் பாட்டில் எப்படி வந்தது எனக்கேட்டு விமர்சித்துள்ளார்.
ஜெட்டில் செல்லும் போது ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் அவரால் எப்படி சுவாசிக்க முடிகிறது. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா. படமா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா என விமர்சித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் திடீரென டிரெண்டான பீஸ்ட் படம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி விஜய்யையும், இயக்குனர் நெல்சனையும் அஜித் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... kamal haasan : ஆண்டவரே... இன்னைக்கு ஒரு புடி! பிரபல யூடியூப் சேனலில் சமைத்து ‘விக்ரம்’ புரமோஷனை தொடங்கும் கமல்