kamal haasan : ஆண்டவரே... இன்னைக்கு ஒரு புடி! பிரபல யூடியூப் சேனலில் சமைத்து ‘விக்ரம்’ புரமோஷனை தொடங்கும் கமல்

kamal haasan : விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளதால், விக்ரம் படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன

Kamal haasan's vikram movie promotions start with village cooking channel

கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளதால், விக்ரம் படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் சமீபத்தில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரயிலில் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு பிரம்மிப்பை ஏற்படுத்தி இருந்தன.

அடுத்ததாக விக்ரம் படத்தை பிரபல யூடியூப் சேனலில் புரமோட் செய்ய உள்ளாராம் கமல். தமிழ் யூடியூப் சேனல்களில் முதன்முறையாக 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்றது வில்லேஞ் குக்கிங் சேனல் என்கிற சமையல் யூடியூப் சேனல். கிராமத்தில் மண்மனம் மாறாமல் அவர்கள் சமைக்கும் சமையலுக்கென உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Kamal haasan's vikram movie promotions start with village cooking channel

கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது வில்லேஞ் குக்கிங் சேனலுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டதோடு அவர்கள் பாணியிலேயே பேசி அசத்தினார். அந்த வகையில் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக வில்லேஞ் குக்கிங் சேனலுடன் இணைந்து கமலும் சமைக்க உள்ளாராம்.

மேலும் விக்ரம் படத்தில் இடம்பெறும் ஒரு கல்யாண காட்சியில் சமையல் செய்பவர்களாக வில்லேஞ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். அதில் இவர்களது டிரேட் மார்க் வசனாமான ‘ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ’ என்கிற வசனமும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கமல் கலந்துகொள்ளும் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Raiza wilson : டூபீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் தமிழ் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் ரெட்ஹாட் போட்டோஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios