Again vijay joins hands together with atlee
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் தெறி. பல விமர்சனங்களை வாங்கி இருந்தாலும் ஹிட் அடித்தடோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இரண்டாம் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, வடிவேலு, சத்யன், யோகிபாபு என மூன்று காமெடியன்களும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால் இவர்களோடு ஜோடியாக நடித்து இருப்பதால், இப்போது புதிதாக நித்யா மேனன், ஜோடி சேர்கிறார்.
இந்தப் படத்தில், வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவரிடம் படம் குறித்துக் கேட்டபோது, “படம் செமையா வந்துருக்கு.
3 கேரக்டர்களில் விஜய் சார் பெர்ஃபாமன்ஸ், டான்ஸ், காமெடி என எல்லாம் கலந்த ஃபுல் மீல்ஸாக இந்தப் படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
