நடிகை திரிஷா, சமூக வலைத்தளத்தில் மிக அதிகமான பாலோவர்ஸை கொண்டவர். சமீபத்தில் நடத்த பட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் போது பீட்டா அமைப்பில் திரிஷா இருந்ததால் அவரை ட்விட்டரில் பல இளைஞர்கள் கடுமையாக தாக்கினர்.
இதனால் ஒரு கட்டத்தில் திரிஷா ட்விட்டரை விட்டே விலகினார் திரிஷா, மேலும் தான் பீட்டா அமைப்பை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினர்.
தற்போது இந்த பிரச்சனை தனித்துள்ள நிலையில், மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைத்துள்ளார், இதில் தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள '92' படம் மற்றும் 'கர்ஜனை' படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்.
இவர் திரும்பவும் இணையதளத்தில் தலை காட்டியுள்ளதால், ஒரு சிலர் வரவேற்றாலும், சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
