Again trisha is taking like jessie role with nivin pauly

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்து வெளிவந்த "விண்ணை தாண்டி வருவாயா" திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவை பெற்ற படமாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது திரிஷா நடித்த, ஜெஸ்ஸி கதாபாத்திரம் தான்.

இந்த படத்தில் தோன்றும் திரிஷாவை பார்ப்பதற்காகவே பல இளைஞர்கள் நான்கு, ஐந்து முறை இந்த படத்தை பார்த்ததாக கூறினார் இந்த திரைப்படம் வெளிவந்தபோது.

இந்நிலையில் மீண்டும் திரிஷா இதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

முதல் முதலில் திரிஷா மலையாளத்தில் நடித்து வரும் படமான 'ஹேய் ஜூட்' படத்தில், ஜெஸ்ஸி போலவே அழகாக காட்டன் புடவையுடன் தோன்றும் கிறிஸ்தவ பெண்ணாக நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக "நேரம்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நிவின் பாலி நடிக்கிறார்.

இந்த படம் குறித்து திரிஷா கூறுகையில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாகவும் தான் திரையுலகில் கற்று கொண்ட அனைத்து திறமைகளையும் இந்த படம் மூலம் வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.