கோலிவுட் திரையுலகில் பல வருடங்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருபவர்கள் அஞ்சலி மற்றும் ஜெய். இவர்கள் காதலர்களைப் போல நடந்துக்கொண்டாலும் இதுவரை தங்களுடைய காதலை ஒற்றுக்கொண்டதே இல்லை. 

இவர்கள் பல முறை காதலிப்பதை உறுதி செய்யும் விதத்தில் இருவரும் சமூக வலைத்தளத்தில் அன்பை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜெய் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்த திரைப்படம் பலூன். வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை படம் பெற்றிருந்தாலும் ஜெய் அதிக அளவில் குடித்து விட்டு படப்பிடிப்பில் சரி வர கலந்துக் கொள்ளாததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்ப்பட்டதாக இயக்குனர் தெரிவித்தார். 

பின் அஞ்சலி மற்றும் ஜெய் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஞ்சலி ஜெய்யின் பிறந்த நாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் இன்று உங்களுடைய சிறப்பான நாள்... உலகில் உள்ள அனைத்து சந்தோஷங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும் என அஞ்சலி வாழ்த்தியுள்ளார். இந்த வாழ்த்தின் மூலம் இவர்கள் காதல் முறிந்துவிட்டதாக வெளியான கிசுகிசுப்புக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் அஞ்சலி.