நடிகர் தனுஷ் என் மகன் என்று கூறி பல வருடங்களாக மதுரை மேலூரை சேர்ந்த மீனாட்சி-கதிரேசன் தம்பதிகள் போராடி வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இவர்கள் மீண்டும் தனுஷ் தன்னுடைய மகன் என்று நிரூபிக்கும் விதமாக மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர்.

இந்த தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் கலைச்செல்வன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 7.11.1985-ல் பிறந்தார். திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தபோது, திடீரென காணாமல் போனார்.

இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மேலூர் நீதிமன்றம் தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரை  கதிரேசன்- மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்த நிலையில் அதை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில்  வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் போலியானது என மதுரை புதூர் காவல் நிலையம் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கடந்தாண்டு கதிரேசன் புகார் அளித்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார் இதனால் மீண்டும் தனுஷின் அம்மா அப்பா பிரச்சனை துவங்க உள்ளது