நடிகை ஓவியா நடிப்பில், இயக்குனர் அனிதா உதூப் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் '90ml' . இந்த படத்திற்கு தற்போது லிட்டர் கணக்கில் பிரச்சனை வந்துகொண்டிருப்பதால், என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தில் ஓவியா மோசமாக நடித்திருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில், திரண்ட 'ஓவியா ஆர்மி' என்கிற அமைப்பை விட்டு ரசிகர்கள் பலர் விலகி விட்டதாக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ‘90ML’ பிரச்சனை கமிஷ்னர் அலுவலகம் வரை சென்றது." பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஓவியா நடித்திருப்பதாகவும் அதற்கு அவரை கைது செய்ய வேண்டும் என்றும்,  இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புகார் ஓவியா மீதும், பட தயாரிப்பாளர் மீதும் போடப்பட்டுள்ளது.  தமிழர் கலாசார போன்றவை சார்பில் அதன் மாநில சட்ட ஆலோசகர் பன்னீர் செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், ' ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில் பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு கலாச்சாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல் உள்ளது.

எனவே ஓவியா மீதும் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.